தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட, அதிர்ச்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து விவ சாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல் வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித் தனர். அப்போது பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட் டங்களிலும் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நெல் சாகுபடி நிலங்களுக்கு மாதந்தோறும் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு நிலுவைத் தொகை முழுவதையும் உடனே வழங்க வேண்டும்.
கடந்த 2015-16ம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனம் தயாராக உள்ளது. அறுவடை ஆய்வு அறிக்கை, பங்குத் தொகையை தமிழக அரசு வழங்காததால் இழப்பீடு பெற முடியவில்லை. இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய விவசாயிகள் வாங்கியுள்ள கூட்டுறவு கடன் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி டெல் டாவில் ஆறு, வாய்க்கால்கள், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளுக்கு ஜனவரி யிலேயே அனுமதி வழங்கி பணிகளைத் தொடங்க வேண்டும்.
கரும்பு பயிரை காப் பாற்ற மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை யின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும். சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு கோடை சாகுபடி மேற்கொள்ள உளுந்து, பயிறு, பருத்தி விதைகளை முழு மானியத்தில் வழங்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட, அதிர்ச்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மணல்குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.