தமிழகம்

அஞ்சல் வழியில் குரூப்-2 முதன்மை மாதிரி தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடத்தவுள்ளது.

மிகவும் சவால் மிகுந்த இந்த தேர்வை கிராமப்புற மாணவர்கள் மற்றும் சுயமாக படித்துவரும் தேர்வர்கள் ஆகியோர் சிறந்த முறையில் எழுதி வெற்றியடைய, டிஎன்பிஎஸ்சி டிராக் (TNPSC track) என்னும் தனியார் யூடியூப் சேனல் ஜன.25 முதல் (நாளை) பிப்.22 வரை தினசரி தேர்வுகளாக மொத்தம் 32 மாதிரி தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாதிரித் தேர்வுகள் அனைத்தும் அஞ்சல் வழியில் நடைபெறுவதால் தமிழ்நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் இத்தேர்வை எழுத இயலும். கூடுதல் விவரங்களுக்கு 9003490650 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். 

SCROLL FOR NEXT