தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் மகன் விவேக் மற்றும் உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டன.
விவேக்கிற்கு வருமான வரி தொடர்பான விசாரணைக்கு ஆஜ ராகும்படி சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் கைதாகலாம் என்ற நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து விவேக் நேற்று மாலை 3.50 மணிக்கு வருமான வரி புல னாய்வு அதிகாரிகள் முன் நேரில் ஆஜரானார். இரவு 9.30 மணி வரை விசாரணை நீடித்தது.