புவி வெப்பமயமாதலைக் குறைக்க வும், நீர் மேலாண்மை, கூடுதல் உற்பத்திக்கு உதவும் வகையிலும் புதிய ‘குறுஞ்செயலி’யை உடுமலையைச் சேர்ந்த பள்ளி மாணவர் உருவாக்கி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை யில் தனியார் பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர் க.திருவருள் செல்வன். இவரது தந்தை கருணா நிதி எலெக்ட்ரீசியனாக வேலை பார்க்கிறார். தாய் மங்கையர்கரசி, அதே பள்ளியில் ஆசிரியை.
நவ.26-ம் தேதி மதுரையில் நடைபெற்ற 44-வது மாநில அளவி லான அறிவியல் கண்காட்சியில் இந்த மாணவரின் புதிய படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. இவர், தென் மண்டல அளவிலான போட்டிக்கும் தேர்வு செயப்பட்டுள்ளார். புதிய கண்டுபிடிப்பு குறித்து மாணவர் திருவருள்செல்வன் கூறிய தாவது:
நீர் மேலாண்மை, அதிக வேளாண் உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்தி, புவி வெப்பமயமாதலைத் தடுக்க உதவும் வகையில் எனது புதிய கண்டுபிடிப்பு உருவாக்கப் பட்டுள்ளது. டிரான்சிஸ்டர், எமிட் டர், பேஸ், கலெக்டர் ஆகிய வற்றைப் பொருத்திய ஒரு காம் போனண்ட் மூலம் மண்ணின் ஈரப்பதம், தட்பவெப்ப நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
ஜிஎஸ்எம் உதவியுடன் இது உருவாக்கப்பட்டது. நிலத்தில் தண் ணீர் இல்லை என்றால் பதிவு செய்த அலைபேசிக்கு அழைப்பு வரும். அதனைத் துண்டித்துவிட்டு அதே எண்ணுக்கு நாம் அழைத்தால், அங்கு உள்ள சிம்கார்ட் மூலம் அலைபேசியில் சவுண்ட் எனர்ஜி, சிக்னலாக மாற்றப்பட்டு மின்மோட் டர் இயங்கத் தொடங்கும். இதற்கு ‘ஆர்டினோ’ என்ற சாதனம் உதவுகிறது.
நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள நீர் தெளிப்பான் மூலம் பயிர் களுக்கு நீர் சென்றடையும். இதற்கு ஐடிஇ மற்றும் c++ சாப்ட்வேர்கள் உதவுகின்றன. நிலத்தின் உரிமை யாளர் வெளிநாட்டில் இருந்தாலும், அங்கிருந்தே இந்தியாவில் உள்ள அவரது தோட்டத்துக்கு அலைபேசி உதவியுடன் தண்ணீர் பாய்ச்சலாம்.
இணையதளத்தில் கிடைத்த தகவல்கள் மற்றும் எனது ஒரு மாத முயற்சியால் புதிய குறுஞ் செயலியை வடிவமைத்தேன்.
புதிய கண்டுபிடிப்புடன் க.திருவருள்செல்வன்.
அடுத்தகட்ட முயற்சியாக பயிர் ரகங்கள், அதற்குத் தேவையான நீர் அளவைப் பதிவு செய்ய உள்ளேன். நெல், தக்காளி ஆகிய வற்றுக்கு அதிக தண்ணீர் தேவை. கம்புக்கு குறைந்த அளவு போதும். பதிவு செய்யப்பட்ட நீர் அளவீடு கள் ஜிஎஸ்எம் தளத்துக்குச் சென்று விடும்.
கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும், நீர் மேலாண்மையை முழுமையாக செயல்படுத்தவும் முடியும். தேவையான தகவல்களை குறிப்பிட்ட நேர இடைவெளியில் நமக்கு அனுப்பும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்படும். தட்பவெப்ப நிலை, நில நடுக்கத் தையும் அறியலாம்.
தாவரங்களுக்கு சூரிய ஆற்றல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கிடைப்பதாகவும், 14 மணி நேரம் அவை உறங்குவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உறங்கும் நேரத்தை குறைக்க எல்.டி.ஆர். உதவியுடன் இயங்கும் டிரான்சிஸ்டர் உடனடியாக அங்கு பொருத்தப்பட்ட சோலார் ஹாலோ ஜென் விளக்கை எரியச் செய்யும். இதனால் தாவரங்களின் உறக்கம் தானாக குறைந்து ஒளிச்சேர்க்கை மூலம் கூடுதல் உற்பத்தி கிடைக்கும். அதனால், மரபணு மாற்றம் இல் லாமலேயே தாவரங்களின் உற்பத் தியை அதிகரிக்க முடியும்.
தாவரங்கள் உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப் பதால் உலகை அச்சுறுத்தும் புவி வெப்பமயமாதலையும் குறைக்க முடியும். மழை நீர், வேளாண் உற்பத்தியும் அதிகரிக்கும் என்றார்.
பள்ளித் தலைவர் ஆர்.கே.ராம சாமி, செயலர் ஆர்.கே.ஆர்.கார்த் திக்குமார் ஆகியோர் கூறும்போது, ‘‘மாணவரின் படைப்பாற்றலை ஊக்குவிக்க பள்ளி நிர்வாகம் தொடர்ந்து உதவும்’’ என்றனர்.