மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் நேற்று கூறியதாவது:
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளால் அவர், தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். குறிப்பாக டெல்லி சென்றுவிட்டு திரும்பியது முதல் மாநில அரசுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்காமல் அமைதி காக்கிறார். அவருக்குப் பதிலாக பொறுப்பு ஆளுநரை நியமிக்க இருப்பதாகத் தகவல் வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்புக் குரல் வட மாநிலங்களிலும் வலுவாக உள்ளது. பிகாரில் இதுகுறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் 60-வது வார்டு முகாம் அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன்-சண்முகப்பிரியா தம்பதியின் மகனுக்கு அறிவமுதன் என திருமாவளவன் பெயர் சூட்டினார்.