தமிழகம்

வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே கனஞ்சாம்பட்டியில் மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 19-ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது.

அங்கு பணிபுரிந்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி (30), அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கருப்பசாமி (26), மாரிமுத்து (54), ராஜ்குமார் (38), மகேஸ்வரன் (42), மாரியப்பன் (42), தங்கராஜ் (49), ஜெயராஜ் (72) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமீர்பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி (26), தாயில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (54) ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT