தமிழகம்

சசிகலாவுக்கு ஆதரவாக மக்கள் சக்தி உள்ளது: தா.பாண்டியன் கருத்து

செய்திப்பிரிவு

‘‘சசிகலாவுக்கு பின் மக்கள் சக்தி உள்ளது’’ என்று அவரை சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக ஜெயலலிதா வின் தோழி சசிகலாவை பொறுப்பேற்க அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், தொடர்ந்து பல தினங்களாக, அதிமுகவின் பல் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை சந்தித்து, தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை அளித்து, அவரை பொறுப்பேற்க வலியுறுத்தி வருகின்றனர். இவர் களைத் தவிர, பல்வேறு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கத்தினரும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தார். அவர், சசிகலாவை சந்தித்து 10 நிமிடங்கள் உரையாடினார். சந்திப்பு முடிந்து வெளியில் வந்த தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் ஜெயலலிதா இறப்பு தொடர்பாக துக்கம் விசாரிக்கவே வந்தேன். அரசியல் தொடர்பாக பேச வரவில்லை. சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறியுள் ளேன். நானும் அரசியல்வாதி, சசிகலாவும் அரசியல்வாதி. சசிகலாவின் பின் மக்கள் சக்தி உள்ளது’’ என்றார்.

சசிகலாவுடனான அவரது சந்திப்பின்போது, இந்திய கம் யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்ளிட்டவர்கள் இருந் தனர்.

SCROLL FOR NEXT