கருத்து கேட்பு கூட்டத்தில் பேசுகிறார் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி. 
தமிழகம்

சென்னை பெருநகர தொலைநோக்கு ஆவணம் தயாரிப்புக்காக கருத்து கேட்பு: மக்கள் பங்கேற்பு குறைவு

செய்திப்பிரிவு

தாம்பரம்: சென்னை பெருநகருக்கான 3-வதுமுழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், நேற்று நடந்தது. மேற்கு தாம்பரம் மற்றும் கிழக்கு தாம்பரத்தில் நடந்த இக்கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு செய்யாததால் குறைந்த அளவிலான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதில் பேசியவர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கும்போது, 20 அடி சாலை ஒதுக்கப்படுகிறது. அதில், இருபுறமும் கால்வாய் கட்டி, மின்கம்பம் நட்டால், 10 அடியாக குறைந்து விடுகிறது. அதனால், இனிவரும் காலங்களில், 20 அடிக்கு பதில், 30 அடி சாலை ஒதுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனைப்பிரிவிலும், திறந்த வெளி பூங்காவுக்காக இடம் ஒதுக்குவது போன்று, பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மையம், சுகதார மையம் மற்றும் நாய்கள் பராமரிப்பு என்று தனித்தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் கேம்ப்ரோடு சந்திப்பில் நடந்த மற்றொரு கூட்டத்தில், பொதுமக்களிடம் கருத்துகேட்காமல், எழுத்து பூர்வமாகவே கோரிக்கைகள் பெறப்பட்டன.

இரும்புலியூரில் கல்வி பயன்பாட்டுக்காக கட்டிடம் கட்டப்பட்டுள்ள பகுதியை தவிர்த்து, மற்றபகுதிகளை குடியிருப்பு பகுதிகளாக வரைபடத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

கிழக்கு தாம்பரம் விமானப் படையை சுற்றி, 100 மீட்டருக்குள் கட்டிடம் கட்ட விமானப்படையால் தடை செய்யப்பட்ட பகுதி என்பதை சிஎம்டிஏ பயன்பாட்டில் தெளிவாக குறிப்பிட வேண்டும். வேளச்சேரி சாலையை அகலப்படுத்தி, மீடியனில் விளக்கு பெருத்த வேண்டும். சேலையூர் ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT