காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாத வழக்குகள் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் உதவி ஆணையர் விசாரணை நடத்தும் புதிய நடைமுறை சென்னையில் அமலுக்கு வந்துள்ளது.
காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மேல் நடவடிக் கைக்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க லாம் என சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தர விட்டிருந்தார். அதன்படி, அரசு விடுமுறை நாட்கள் தவிர திங்கள் முதல் வெள்ளிவரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கூடுதல் ஆணையர் எஸ்.என். சேஷ சாய், துணை ஆணையர் ஏ.ராதிகா ஆகியோர் தினமும் புகார் மனுக் களை பெற்று வருகின்றனர். சராசரி யாக தினமும் 30 முதல் 50 பேர் வரை பல்வேறு பிரச்சினைகள் தொடர் பாக புகார் அளித்து வருகின்றனர்.
முன்பெல்லாம் இதுபோன்ற புகார் மனுக்களை அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடமே மீண்டும் விசாரணைக்காக அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. ஆனால், தற்போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணை நடத்தவில்லை என்றால், மேல் நடவடிக்கைக்காக உதவி ஆணையர் அல்லது துணை ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது.