சென்னை: குரூப்-3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த செப்.15-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி குரூப்-3 பதவியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜன.28-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை தேர்வர்கள் www.tnpsc.gov.in,www.tnpscexams.in ஆகியடிஎன்பிஎஸ்சி இணையதளங் களில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.