விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் நடைபெற்ற சோதனைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட ஆலைகளுக்கு நோட் டீஸ் அனுப்பப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், நாக்பூர் மற்றும் சென்னை மத் திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும், பட்டாசு ஆலைகள் என மாவட்டத்தில் மொத்தம் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
சிவகாசி அருகே செங்கமலப் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையிலும், வெம்பக்கோட்டை அருகே கனஞ்சாம்பட்டியில் உள்ள ஒரு ஆலையிலும் நேற்று முன்தினம் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
அதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் விதிமீறல்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய வருவாய், காவல், தீய ணைப்பு, தொழிலக பாதுகாப்பு, தொழிலாளர் ஆகிய துறையினர் நேற்று சோதனை செய்தனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, வெம்பக் கோட்டை, ராஜபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது பட்டாசு ஆலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவு வெடிமருந்துகள் மட்டுமே கையாளப்படுகிறதா, அனுமதிக் கப்பட்ட எண்ணிக்கையைவிடக் கூடுதல் நபர்கள் பணியமர்த்தப்பட் டுள்ளார்களா, விதிகளை மீறி பேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா, அனுமதி இல் லாத ஆலைகளில் பட்டாசு திரி தயாரிக்கப்படுகிறதா, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா, ஒவ் வொரு அறையிலும் குறிப்பிட்ட நபர்களுக்கு அதிகமானோர் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்களா எனச் சோதனை நடத்தினர். குறைபாடுகள், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட பட்டாசு ஆலை களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.