நாடு முழுவதும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சேவை கள் வழங்கும் மென்பொருள் ஏற்கெனவே தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் மேலும் 12 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைமுறைக்கு வருகிறது.
நாடு முழுவதும் மார்ச் 2016 வரையிலான கணக்கெடுப்பின்படி ஆட்டோ, பேருந்து, பள்ளி வாகனங்கள் என பொதுப் போக்குவரத்துப் பிரிவில் 12,13,007 வாகனங்களும், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட தனிநபர் பிரிவில் 2,08,20,773 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனங் களின் பதிவு, புதுப்பித்தல், புதிய ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகனங் கள் மற்றும் ஓட்டுநர்கள் சார்ந்த பணிகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் பணிகளை ஆன்லைன் மூலம் ஒருங்கிணைக்க இணையதளம் மூலம் ஒருங்கிணைந்த வகையில் செயல்படும் ‘வாகன்’ (வாகனங் களின் பதிவுகள்), ‘சாரதி’ (ஓட்டுநர் களின் பதிவுகள்) ஆகிய மென் பொருள்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் அமைச்சகம் அறிமுகம் செய்தது.
சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 175 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கெங்கு?
தமிழகத்தில் ஏற்கெனவே, இந் தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் கூடுதலாக நாமக்கல் வடக்கு (டி.என்.28), கரூர் (டி.என்.47), கிருஷ்ணகிரி (டி.என். 24), மயிலாடுதுறை (டி.என்.82), மதுரை வடக்கு (டி.என்.59), நாகர் கோவில் (டி.என்.74), புதுக்கோட்டை (டி.என்.55), செங்குன்றம் (டி.என்.18), சென்னை-தென் மேற்கு (டி.என்.10), விழுப்புரம் (டி.என்.32), விருதுநகர் (டி.என்.67), சிவகங்கை (டி.என்.63) ஆகிய 12 வட்டாரப் போக்குவரத்து அலுவல கங்களில் சாரதி (Sarathi Ver 4.0) மென்பொருள் மூலம் இணைய தளம் மூலம் ஓட்டுநர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை மேற் கொள்ளும் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளன. இதனை ஒருங்கி ணைக்கும் பணிகளை தேசிய தக வலியல் மையம் (NIC) மேற்கொண் டுள்ளது. இந்த வசதி அமல்படுத் தப்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள ஊழியர் களுக்கு ஏற்கெனவே தேசிய தகவலியல் மைய பொறியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.
தடங்கல், தாமதமின்றி
ஏற்கெனவே, சர்வர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த மென்பொருள் தற்போது இணை யம் மூலம் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எவ்வித தடங்கல் மற்றும் தாமதமின்றி இந்த மென்பொருள் செயல்படும்.
போலிகளைக் கண்டுபிடிக்க முடியும்
வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் இதுகுறித்து மேலும் கூறும்போது, “ஓட்டுநர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும். இதனால், ஓட்டுநர்களின் விவரங்களை நாடு முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அறிந்துகொள்ளலாம்.
இந்த வசதியால், ஓட்டுநர் உரிமம் பெறுவதில் முறைகேடு, தவறு, போலி ஓட்டுநர் உரிமம், ஆள் மாறாட்டம் உள்ளிட்டவைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். இதுபோன்று மேலும் பல்வேறு வசதிகளும் இந்த மென்பொருள் மூலம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.