பெங்களூரு புகழேந்தி | கோப்புப் படம் 
தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் கைகாட்டுபவரே வெற்றி பெறுவார்: பெங்களூரு புகழேந்தி கருத்து

செய்திப்பிரிவு

கோவை: ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியினருக்கு 49 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், 9 தொகுதிகளில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றனர்.

இதில், தமாகா போட்டியிட்ட 6 இடங்களிலும் தோல்வியை தழுவியது. இந்த சூழலில்தான் தற்போது மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட கோருகின்றனர். அந்த தொகுதியை தமாகாவிடம் ஒப்படைத்துவிட்டு தேர்தல் களத்திலிருந்து தப்பித்துவிடலாம் என பழனிசாமி நினைக்கிறார்.

கொங்கு மண்டலம் தங்களுடையது என்று மார்தட்டிய பழனிசாமி தேர்தல் களத்தில் நிற்க வேண்டும். அந்த தொகுதியில் நாங்கள் போட்டியிட தயாராக இருக்கிறோம். ஓபிஎஸ் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவர் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் வெற்றி பெறுவார். பாஜக ஒரு கூட்டணியை அமைத்து அதன் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொண்டு வழிநடத்த வேண்டும்.

SCROLL FOR NEXT