ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி ஆய்வு செய்தார். 
தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இப்பணியை, அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி ஆய்வு செய்தார். பெங்களூருவில் இருந்து வந்துள்ள பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் முதல்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டனர்.

ஆய்வுக்குப் பின்பு மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் ஆகிய இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணி நடந்தது. இடைத் தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

வாக்குப் பதிவுக்காக, 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக கண்காணிப்புக் குழு, நிலைக் குழு, பறக்கும் படை போன்றவை அமைக்கப்படும், என்றார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கோட்டாட்சியர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT