தமிழகம்

திருநங்கைகளுக்கு பாதுகாப்பு அளிக்க புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருநங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க புதிய சட்டம் கொண்டுவர வேண் டும் என்று விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி யுள்ளார்.

திருநங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண் டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத் தில் நேற்று கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தின் பொதுச் செயலாளர் வே.பாரதி தொடக்க உரையாற் றினார். இதையடுத்து, தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் ராம், கவிஞர் சல்மா உட்பட பலர் பேசினர். இதில், 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.

இதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன் பேசியதாவது: திரு நங்கை தாராவின் இறப் புக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திருநங் கைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

துறையூர் அருகே நடந்த வெடி விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். இறந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும். காயமடைந்த வர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT