தமிழகம்

செம்பட்டி வெடி விபத்தில் உயிரிழந்த இந்து முன்னணி நிர்வாகியின் உடல் மீட்பு

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: செம்பட்டியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் கட்டிட இடிபாடிகளில் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகியின் உடல் மீட்கப்பட்டது. அவரது குடும்பத்தினரை சந்தித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் பட்டாசு கடை நடத்தி வந்தவர் இந்து முன்னணி மேற்கு மாவட்டப் பொதுச்செயலாளர் ஜெயராமன். பட்டாசு கடைக்கு மேல் உள்ள தளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நாட்டு வெடி வெடித்ததில் இவர் வசித்த மேல்தளம் முற்றிலும் இடிந்து சேதமடைந்தது.

இதில் ஜெயராமன், அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளை அகற்றி நாகராணியின் உடலை மீட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்பு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜெயராமனின் உடலை மீட்டனர். மீட்புப் பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டார்.

இந்நிலையில், ஜெயராமனின் குழந்தைகள், குடும்பத்தினரை நேற்று காலை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT