பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

பழநியில் பிஎஃப்ஐ நிர்வாகியிடம் 3-வது நாளாக என்ஐஏ விசாரணை

செய்திப்பிரிவு

பழநி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் நிர்வாகி முகமது கைசரிடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.

பழநி திருநகரைச் சேர்ந்தவர் முகமது கைசர்(50). இவர் பழநியில் டீ கடை நடத்தி வருகிறார். இவர் தடை செய்யப்பட்ட பாப் புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் மதுரை மண்டலத் தலைவராக இருந்தார். இந்நிலையில் டெல்லியி லிருந்து பழநிக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 பேர், முகமது கைசரை பழநி நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர். இதேபோல் பழநியைச் சேர்ந்த சதாம் உசேன்(26) உட்பட மேலும் சிலரிடமும் என்ஐஏ அதிகாரிகள் பிற்பகல் வரை தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இவர்களிடம் கோவை, கர்நாடகாவில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் பிஎஃப்ஐ செயல்பாடுகள் குறித்து விசாரித்தனர். அதன்பின்னர் என்ஐஏ அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

SCROLL FOR NEXT