புயலில் சிக்கிய 1,509 பேரை மீட்ட தீயணைப்பு வீரர்களையும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களையும் தீயணைப்பு துறை இயக்குநர் குடவாலா பாராட்டினார்.
சமீபத்திய புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பல இடங்களில் சுவர்களும் இடிந்து விழுந்தன. மரங்கள் மற்றும் சுவர்களின் இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அந்தந்த பகுதி தீயணைப்பு படை யினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மற்றும் காஞ்சி புரம் மாவட்டங்களில் 60 குழுவின ரும், சென்னையில் 48 குழுவின ரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் 80 இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்றன. இதில் சாலையில் விழுந்த 423 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. புயல் ஆபத்தில் சிக்கிய 1,467 பேர் மீட்கப்பட்டனர். சென்னையில் 218 இடங்களில் மீட்பு பணிகள் நடை பெற்றன. வீடுகள், கார்கள் மற்றும் சாலையில் விழுந்த 651 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. ஆபத்தில் சிக்கிய 42 பேரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
நுங்கம்பாக்கம் 9-வது மண் டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதிக்கு நேரில் சென்ற தீயணைப்பு துறை இயக்குநர் குடவாலா, பொதுமக்களை உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினரையும், மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களையும் கைகுலுக்கி பாராட்டினார். மீட்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக வெளியூரில் இருந்தும் தீய ணைப்பு வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று தங்களது சொந்த ஊருக்கு புறப்படுகின்றனர்.