எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து டிடிவி தினகரன் 
தமிழகம்

ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்: டிடிவி தினகரன்

செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இபிஎஸ், ஓபிஎஸ் பதவி சண்டையால் அதிமுக யாருக்கு என்பது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அமமுக எடுக்கும். தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்." இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT