ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம் 
தமிழகம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு: சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

செய்திப்பிரிவு

சென்னை: "நான் சர்வாதிகாரி இல்லை. கழகம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தொண்டர்கள் அனைவருக்கும் ஓபிஎஸ் இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், "நான் சர்வாதிகாரி இல்லை. கழகம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT