தமிழகம்

ஒற்றுமையாக செயல்படாவிட்டால் கடும் நடவடிக்கை: தமிழக பாஜக தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஒற்றுமையாக செயல்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண் டியிருக்கும் என தமிழக பாஜக தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக, விசுவ இந்து பரிஷத் (வி.எச்.பி.), அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.), இந்து முன்னணி போன்ற அமைப்புகள் சங்கபரிவார் என அழைக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் தேசிய மற்றும் மாநில அளவில் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை மதிப்பிடும் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தமிழகத்தில் உள்ள சங்பரிவார் அமைப்புகளின் ஓராண்டு செயல்பாடுகளை மதிப் பிடுவதற்கான ஆய்வுக் கூட்டம் கடந்த 17, 18 தேதிகளில் தேனியில் உள்ள சுவாமி ஓங்காரானந்தர் ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாடு - கேரள மாநிலத் தலைவர் இரா.வன்னிய ராஜன், செயலாளர் ராஜேந்திரன், அமைப்பாளர் ஸ்தாணு மாலயன், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாய கம், மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 30 அமைப் புகளின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஒவ்வொரு அமைப்பின் தலைவரும் 2016-ம் ஆண்டில் தங்களது அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ள 49 மாவட்டங்கள், 1,125 மண்டலங்களில் மாதந்தோறும் செயற்குழு கூட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. தமிழக பாஜகவில் 49 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 66 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் கிளைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என தெரிவித்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், இடைத்தேர்தல்களில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய ஆர்.எஸ்.எஸ். தென்னிந்திய தலைவர் இரா.வன்னியராஜன், பாஜகவில் நடக்கும் கோஷ்டி பூசல்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தென் னிந்திய அமைப்பாளர் ஸ்தாணு மாலயன், தமிழிசை, பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா என பாஜக தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இறுதியாக பேசிய ஸ்தாணு மாலயன், ‘‘தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கட்சியில் பல குழுக்கள் உள்ளன. ஒருவரது ஆதரவாளர் மற்ற தலைவர்களை சந்தித் தால் அவரை பழிவாங்குவது, தலைவர்கள் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசாமல் இருப் பது போன்ற செயல்பாடுகள் வேதனை அளிக்கிறது. கோஷ்டி பூசல்கள் கடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத் தியதை பலரும் எங்களிடம் ஆதாரங் களுடன் தெரிவித்துள்ளனர்.

எனவே, தலைவர்கள் மற்ற நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உதாரணமாக விளங்கும் வகையில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இல்லையெனனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்ததாக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் 2 நாட்கள் வெளியே செல்ல அனு மதிக்கப்படவில்லை. ஆசிரம வளாகத்திலே தங்க வைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

கட்சியின் புதிய உறுப்பி னர்களுக்கு இந்துத்துவ கொள்கை கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும், கிளை கமிட்டி முதல் மாநில நிர்வாகிகள் வரை பாஜக பொறுப்பாளர்களை ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தேனியில் 2 நாள்கள் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT