தமிழகம்

பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

செய்திப்பிரிவு

பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார்.

தமிழகத்தை புரட்டிப்போட்ட ‘வார்தா’ புயலால் பல கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் நிவாரண நிதி கேட்பதற்காகவும், பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காகவும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்புக்காக திங்கட்கிழமை (நாளை) நேரம் ஒதுக்கித் தருமாறு பிரதமர் அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தகவல் அனுப்பியுள்ளார். அனுமதி கிடைத்ததும் அவருடைய டெல்லி பயணம் உறுதி செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT