சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.கீதா, எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரது சந்தேக மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதியவும், அரசு உயரதிகாரிகள் பிரமாண வாக்குமூலம் அளிக்கவும், போயஸ் தோட்டம் மற்றும் அப்போலோ மருத்துவமனை சிசிடிவி பதிவுகளை பத்திரப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந் தார்.
இந்த மனு எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் ஜெ.சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான கே.எஸ்.கீதாவும், அவரது வழக் கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியும் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி, ‘‘இது தொடர்பாக முதலில் சம்பந்தப்பட்ட போலீஸில் அல்லது போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்துவிட்டு அதன்பிறகு நீதிமன்றத்தை நாடுங்கள்’’ என அறிவுரை கூறி விசாரணையை ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.