திமுக தலைவர் மு.கருணாநிதி முழு உடல்நலம் பெற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை யில், “திமுக தலைவர் கருணா நிதி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அவர் முழு உடல்நலம் பெற்று, பொதுப்பணி யைத் தொடர வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள் ளார்.
இரா.முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கையில், “தமிழகத் தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணா நிதி உடல் நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார் என்ற செய்தி அறிந்து கவ லையடைந்தோம். பொதுவாழ் வில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட அவர் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.