தமிழகம்

வார்தா புயல்: பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க டிஜிபி அறிவுரை

செய்திப்பிரிவு

பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க டிஜிபி, சென்னை காவல் ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

வார்தா புயலை முன்னிட்டு தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன், பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:

“வார்தா புயலால் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. பல இடங்களில் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. எனவே, பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மரத்தின் அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, போலீஸார், தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் விடுத்துள்ள அறிக்கையில், “பாதுகாப்பு கருதி பொது மக்கள் வீட்டி லேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுகின் றனர். வாகனங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், பொதுமக்கள் வாகனங் களை மரம், மின் கம்பிகள் அருகே நிறுத்த வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT