அவலாஞ்சி பகுதியில் உறை பனி படர்ந்து காணப்பட்ட புல்வெளி. (அடுத்த படம்) 
தமிழகம்

நீலகிரி மாவட்டத்தில் கொட்டும் உறை பனி: அவலாஞ்சியில் மைனஸ் 3 டிகிரி பதிவு

செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவலாஞ்சியில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

உதகை நகரைவிட அடர்ந்த வனப்பகுதி, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அவலாஞ்சி, அப்பர் பவானி, போர்த்திமந்து உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கும் கீழ் பதிவாகி வருகிறது.

குறிப்பாக, அவலாஞ்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்புவெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரியாகபதிவாகி இருந்தது. தொடர்ந்துஅங்கு உறைபனியின் தாக்கம் அதிகரித்ததால், அவலாஞ்சி பகுதியில் நேற்று மைனஸ் 3 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை இருந்தது.

நீர் நிரம்பி காணப்படும் அவலாஞ்சி அணை .

இதன் காரணமாக அணையின் அருகே புல்வெளிகளில் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. அதிகாலை நேரத்தில் தண்ணீர் ஆவியாகிமேலே செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. அடர்ந்தவனப்பகுதி என்பதால், பொதுமக்கள் யாரும் இல்லை.

உதகை தாவரவியல் பூங்காவில் நேற்று அதிகபட்ச வெப்ப நிலை 23.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 2.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.உறைபனியால் வனப்பகுதிகளிலுள்ள புல்வெளிகள் கருகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "உதகையில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. 2017-ம் ஆண்டு மைனஸ் 7 டிகிரி செல்சியஸுக்கு சென்றது. ஆனால்,இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பில்லை. தற்போது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பொங்கலுக்கு பின்னர் உறைபனி பொழிவு நின்றுவிடும்" என்றனர்.

SCROLL FOR NEXT