தமிழகம்

76,440 பேருக்கு கூட்டுறவு வங்கி கணக்கு தொடக்கம்: 41 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.148 கோடி பயிர்க்கடன் - தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த 10 நாட் களில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் 76,440 விவசாயி களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, 40,892 பேருக்கு ரூ.148.22 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்க தல்ல என ரிசர்வ் வங்கி அறிவித்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டிசம்பர் 31-ம் தேதி வரை செலுத்தும் முறை குறித்தும் வழிகாட்டியது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழி காட்டு நெறிமுறைகளில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கி என்ற வரன்முறைக்குள் வரவில்லை. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை கடன் சங்கங் கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சங்கங்களால் பயிர்க்கடனும் வழங்க முடியவில்லை. பழைய நோட்டுகளை வாங்கி மாற்ற முடியாத காரணத்தால், கூட்டுறவு வங்கிகளின் சேவை முடங்கியது.

இதையடுத்து, விவசாயிகளுக்கு தடையின்றி பயிர்க்கடன் வழங்கு வதற்காக, கடந்த 22-ம் தேதி கூட்டுறவுத்துறை ஓர் அரசாணை வெளியிட்டது. அதன்படி, தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு வழக்கம்போல பயிர்க்கடன் வழங்க அனுமதிக் கப் பட்டுள்ளது. விவசாயிகள் பெயரில் கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்கப்படு கிறது. கூட்டுறவு கடன் சங்கங்கள் அளிக்கும் அனுமதியின் பேரில், கூட்டுறவு வங்கிகளில் கடன் தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம், கடன் தொகையில் விவசாயி ஒரு வாரத்துக்கு ரூ.25 ஆயிரத்தை ரொக்கமாக வங்கிக் கணக்கில் இருந்து பெறு கின்றனர்.

விவசாயிகளுக்கான உரம், விதை மற்றும் இடு பொருட்கள், பயிர்க்காப்பீட்டுத் தொகை ஆகி யவையும் பயிர்க்கடன் வழங்கும் போது அக்கணக்கில் பற்று வைத்து வழங்கப்படுகிறது. பயிர்க் காப் பீட்டுத் தொகையை, தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் டிசம்பர் 5-க்குள் செலுத்தும்.

கடந்த மாதம் 23-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை 10 நாட் களில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் 76,440 விவசாயி களுக்கு கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. இதில், 40,892 பேருக்கு ரூ.148 கோடியே 22 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 32,430 விவசாயிகளுக்கு ரூ.23 கோடியே 99 லட்சத்துக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 19,250 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சம் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப் பட்டுள்ளது.

இதுதவிர, கடந்த மாதம் 23-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறாத 2 லட்சத்து 64 ஆயிரத்து 967 விவசாயிகளிடம் இருந்து ரூ.18 கோடியே 60 லட்சம் பயிர்க் காப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட்டு, காப்பீட்டு நிறு வனங்களுக்கு வழங்கப்பட்டுள் ளது.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் நவம்பர் 30-ம் தேதி வரை 7.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,061 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த நிதியாண்டில் கடந்த நவம்பர் 30-ம் தேதி வரை 4 லட்சத்து 7 ஆயிரத்து 387 விவசாயிகளுக்கு ரூ.2,376 கோடியே 83 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT