தமிழகம்

திருச்சி வெடி விபத்து: பலியானோருக்கு ஆளுநர் இரங்கல்

செய்திப்பிரிவு

திருச்சியில் வெடிபொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பலி யானவர்களின் குடும்பத்துக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்டம், முருங்கப் பட்டியில் நடந்த சோகமான வெடிவிபத்து சம்பவத்தை அறிந்து மிகுந்த அதிர்ச்சியுற்றேன். இந்த சம்பவத்தில் 18 பேர் இறந்ததுடன், மேலும் பலர் படு காயமடைந்துள்ளனர். இறந்தவர் கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT