தமிழகம்

ஜெயலலிதா மீது வீண்பழி சுமத்திய ராம மோகன ராவை கண்டிக்க வேண்டும்: அதிமுகவினருக்கு இல.கணேசன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

வருமான வரி சோதனை குறித்து கருத்து தெரிவித்த போது மறைந்த முதல்வர் ஜெய லலிதாவை அவமானப்படுத்திய முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவை ஆட்சியில் இருப்பவர்களும், அதிமுக வினரும் கண்டிக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மக்கள் பேரவை சார்பில் இல. கணேசனுக்கு நேற்று மதுரையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம், கட்டி கட்டியாக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதை மறைக்க ராம மோகன ராவ் தற்போது என்னை வீட்டுச் சிறையில் வைத்தனர் என்றெல்லாம் சொல்லி அனுதாபம் தேட முயற்சிக் கிறார்.

அவரை ஜாமீனில் கூட விடக் கூடாது. உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின் றனர். அத்துடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் வம்புக்கு இழுத்து, அவருக்கு அவமானத் தையும் ஏற்படுத்தியுள்ளார். இதை ஆட்சியில் இருப்பவர்களும், அதிமுகவினரும் கண்டிக்க வேண்டும்.

ராம மோகன ராவ் செய்த தவறுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மவுனமாக இருக்க வேண்டும். மத்திய அரசு மீது வீண்பழி சுமத்துவது சரியல்ல. அவரை மக்கள் நம்பப்போவதில்லை. யாரையோ குற்றம்சாட்டுவதற் காக அவர் மத்திய அரசை சாடியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது தொடர்பாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. தவறு செய்தவர்கள் தலைமைச் செயலராக இருந்தாலும் மத்திய அரசு விடவில்லை என மக்கள் பாராட்டுகின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT