சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் 62 வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றிவரும் என்.சந்திரசேகரன், ஏ.வி.சோமசுந்தரம், என்.ஜோதி, எஸ்.நடராஜன், சி.டி.மோகன்,என்.அனந்த பத்மநாபன், வி.ராகவாச்சாரி, ஜி.கார்த்திகேயன், பி.வி.எஸ்.கிரிதர், டி. லஜபதிராய், என்.முரளிக்குமரன், எம்.சுபாஷ்பாபு, தாட்சாயிணி ரெட்டி, ஜி,சங்கரன், எஸ்.ஆர்.ராஜகோபால், அப்துல் சலீம், எஸ்.முகுந்த், டி.கவுதமன், ஆர்.காந்தி, ஆர்.ஜான் சத்யன், அபுடு குமார் ராஜரத்தினம், பி.சரவணன் மற்றும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக பணியாற்றும் பி.குமரேசன், ஜெ,ரவீந்திரன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உட்பட 62 பேர் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் பி.தனபால் தெரிவித்துள்ளார்.