சேலம்: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் நிரப்ப தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்,’ என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பு: சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நிரப்பப்படவுள்ளன.
சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணிடத்துக்கு தகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ வரும் 17-ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்:109, சேலம் – 636001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.