சென்னையை புரட்டிப்போட்ட ‘வார்தா’ புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் பல இடங் களில் மின் விநியோகம் தடை பட்டுள்ளது. இந்நிலையில் மின் தடையை பயன்படுத்தி வீடுகளில் திருடும் கும்பல் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது. கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை களில் புயல், மழை மற்றும் மின் தடையால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி விட்டனர். இதை பயன்படுத்திய திருட்டு கும்பல்கள், ஆளில்லாத வீடு களின் பூட்டுக்களை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர்.
ஆளில்லாத வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 43 வழக்குகள் பதிவாகியுள்ளன. திருடுபோன வீட்டின் உரிமையாளர்கள் வந்தால் மட்டுமே திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு தெரியவரும்
வீடுகளில் திருடும் இந்த கும்பல் கள் வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ளதாக கூறப்படு கிறது. இவர்கள் பகலில் ஒவ்வொரு இடமாக சென்று ஆளில்லாத வீடுகளை நோட்மிடுகின்றனர். பின்னர் இரவில் அந்த வீடுகளுக்கு சென்று திருடுகின்றனர். சென்னையில் தனியாக இருக்கும் வீடுகளே இவர்களின் முதல் குறியாக உள்ளது.
இந்த திருட்டு கும்பல்களை பிடிக்க, போலீஸார் தற்போது ரோந்து பணியை அதிகரித்துள்ளனர். பகல் மற்றும் இரவில் வழக்கமான ரோந்து பணியுடன், குறிப்பிட்ட இடைவெளியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திரு நின்றவூர் பகுதியில் வீடுகளில் திருடும் கும்பலை போலீஸார் பிடித் துள்ளனர். விசாரணையில் அவர் கள் வியாசர்பாடியில் இருந்து அங்கு சென்று திருடியது தெரிய வந்தது. இதேப்போல கே.கே.நகர், அசோக் நகர், சிஐடி நகர், எம்.ஜி.ஆர் நகர், அண்ணா நகர், அமைந்தகரை பகுதிகளிலும் ஒரு சில நபர்களை சந்தேகத்தின்பேரில் போலீஸார் பிடித்து விசாரித்ததில், அவர்கள் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருடுவதற்காகவே சென்னை வந்தது தெரியவந் துள்ளது.
சென்னையின் தற்போதையை அசாதாரண சூழ்நிலையை பயன் படுத்தியே இந்த கும்பல் திருடு கிறது. பல இடங்களில் வழிப்பறியும் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கு மாறு போலீஸார் எச்சரித்துள்ளனர்.