தமிழகம்

அயனாவரத்தில் 9 கிலோ தங்கம் திருட்டில் முக்கிய நபர் கைது: திருட்டுக் கும்பல் தலைவனாக செயல்பட்டது அம்பலம்

செய்திப்பிரிவு

அயனாவரம் நகைக் கடையில் 9 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபரை ராஜஸ்தானில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோபாராம், சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6-வது தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது நகை கடையில் தனது மாநிலத்தைச் சேர்ந்த தீபக் என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். இவர் கோபாராமின் வீட்டிலேயே தங்கி இருந்து வேலைக் குச் சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கடையை பூட்டி விட்டு ஓட்டேரியில் உள்ள ஜெயின் கோயிலுக்கு குடும்பத்துடன் கோபாரம் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கடையில் இருந்த 9 கிலோ நகைகள், லாக்கரில் இருந்த ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டு இருந்தன. தீபக், அவரது பெண் தோழி மற்றும் 3 நண்பர்கள் சேர்ந்து இந்த திருட்டை அரங்கேற்றியது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் அயனா வரம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். 35 நாள் தேடலுக்கு பின்னர் அக்டோபர் முதல் வாரத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தீபக் சிக்கினார். ஒரு வாரம் கழித்து அவரது பெண் தோழியும் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து 2 கூட்டாளிகளும் சிக்கினர்.

திருடு போன 9 கிலோ நகையில் 3 கிலோ நகைகள் மட்டுமே இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மீதமுள்ள நகைகள் இந்த திருட்டு சம்பவத்துக்கு மூளையாக செயல் பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தினேஷிடம் இருந்தது. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந் தார்.

போலீஸார் நடத்திய விசாரணை யில், இவர் ஒரு திருட்டுக் கும்ப லுக்கே தலைவராக இருப்பது தெரிந் தது. மீதமுள்ள நகைகள் அவரிடம் இருந்ததால் தினேஷை பிடிக்க தனிப் படை போலீஸார் தீவிரம் காட்டினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜஸ்தானில் வைத்து தினேஷை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று அவர் சென்னை அழைத்து வரப்பட் டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT