தமிழகம்

வடகிழக்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, சேதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

செய்திப்பிரிவு

இந்த பருவமழையில் உயிரிழப்பு கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன் உரு வான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாகி நேற்று முன் தினம் புயலாக மாறியது. இது வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டது.

இதனால், தமிழகத்தில் கட லோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் எச்சரிக்கை விடுக் கப்பட்டுவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி களுக்கு இரு தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீய ணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தொடர் பாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாவட்டம், மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதில் வருவாய், காவல், தீயணைப்பு, மின்சாரத் துறையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். உதவி தேவைப்படும் பகுதிகளில் இக் குழுக்கள் உடனடியாக இயங்கும். பொதுமக்கள் வாட்ஸ்-அப் உள் ளிட்ட சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். டிவி மற்றும் ஊடகங்களில் அரசு அளிக் கும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பின்பற்ற வேண்டும். பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் பாதிப்பு ஏற்படா மல் குறிப்பாக உயிரிழப்பு ஏற்படா மல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன.

கடந்த முறை மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வெள் ளத்தில் சிக்கியவர்களை மீட்க படகுகளும் தயார் நிலையில் உள் ளன. தங்குமிடமும், தேவையான அளவு உணவும் தயாராக உள் ளது. கடந்த ஆண்டு வெள்ளத் தின் போது கைபேசி இணைப்பு கள் செயலிழந்தது பெரிய பிரச்சினை யாக இருந்தது. இம்முறை தனியார் மற்றும் பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்தினருடன் பேசி, தொலை தொடர்பு சேவை தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின் கம்பிகள், ஒயர்கள், தாழ் வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின் ஒயர்கள் தொடர்பாக பொது மக்கள் மின்வாரியத்துக்கு தெரி வித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் பகுதியில் வெள்ளத் தில் சிக்கியவர்களை மீட்க மாவட்ட அளவில் 1077 அல்லது மாநில அளவில் 1070 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற சூப்பர் சக்கர் இயந் திரங்கள் பயன்படுத்தப்படுகின் றன. தமிழகத்தில் மழை வெள் ளத்தை எதிர்கொள்ள எடுக்கப் பட்டுள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை பார்வையிட்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழும உறுப்பினர் மார்வா சிறப்பாக இருப் பதாக பாராட்டியுள்ளார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, தமிழக வருவாய்த்துறை செயலர் பி.சந்திர மோகன், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

SCROLL FOR NEXT