திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறும் என்றும் அதில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பிய நிலையில், டிசம்பர் 20-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த 10-ம் தேதி அறிவித்திருந் தார்.
இந்நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 15-ம் தேதி கருணாநிதி மீண்டும் காவிரி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டது.
கடந்த 9 நாள்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி நேற்று மாலை 4.42 மணிக்கு வீடு திரும்பி னார். எனவே, தள்ளிவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாலும் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும், டிரக்யாஸ்டமி சிகிச்சைக்கான குழாய் மேலும் சில வாரங்களுக்கு இருக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை அறி வித்துள்ளது. எனவே, இந்தக் கூட் டத்தில் கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படு கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. முக்கியமாக காலகட்டத்தில் உடல்நலக் குறைவால் வழக்கம் போல கருணாநிதியால் செயல் படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு உதவியாக மு.க.ஸ்டாலின் திமுக செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என திமுக முக்கியத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி வழங்குவதற்கு பொதுச்செயலாளர் அன்பழகன் ஒப்புதல் அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
கருணாநிதி மருத்துவமனையில் இருக்கும்போது புதிய பொறுப்பு வேண்டாம் என அன்பழகன் கேட்டுக் கொண்டதாலேயே பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.