தமிழகம்

குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக எம்.பி.க்கள் முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, தமிழக ஆளுநர் குறித்து புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க அவர்கள் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT