தமிழகம்

காஞ்சிபுரம் அருகே தென்னேரியில் வெள்ளத்தில் சிக்கி 77 மாடுகள் பலி: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் உத்தரவு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகே தென்னேரி பகுதியில், புயலின்போது மிரட்சி யில் ஓடிய 77 மாடுகள், வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தன.

தென்னேரி அருகே உள்ள ஆலப்பாக்கம், சூரமேணிக்குப்பம், சிங்காடிவாக்கம், அத்திவாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை தென்னேரி அருகே உள்ள வயல் வெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டி வருவது வழக்கம்.

கடந்த 12-ம் தேதி புயல் காற்று வீசியபோது, வீடுகளில் கட்டப் பட்டு இருந்த மாடுகள் மிரண்டன. பல மாடுகள் மிரட்சியில் கயிற்றை அறுத்துக் கொண்டு வழக்கமாக மேய்ச்சலுக்கு செல்லும் தென் னேரி ஏரிப் பகுதியை நோக்கி ஓடின.

ஏரியின் நீர்வரத்து கால்வாயை தாண்டி செல்லும்போது, அவை வெள்ளத்தில் அடித்துச் செல் லப்பட்டன. புயல் ஓய்ந்த பிறகு மாடுகளை தேடி வந்த உரிமையாளர்கள், தென்னேரி ஏரியில் 77 மாடுகள் இறந்து மிதப் பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த னர். தகவல் அறிந்த வேடல் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். இறந்து கிடக்கும் மாடுகள் மூலம் நோய் பரவுவதை தடுக்க, அவை டிராக்டர், ஜேசிபி இயந்திரம் மற்றும் படகுகள் மூலம் கரைக்கு எடுத்து வரப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டன.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT