கோவை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நொய்யலை மீட்க வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. நொய்யல் நலம் பெறட்டும், கொங்கு வளம் பெறட்டும். பசுமை தாயகம் அமைப்பின் மூலம் இந்த நொய்யலை மீட்டெடுக்க வேண்டும். இது முடியும் என்ற நோக்கில் வந்துள்ளேன்.
அரசியல் நோக்கம் பாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பருவ நிலை மாற்றம் மிகப்பெரிய சவால். அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஆளுநரும், ஆளும் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும். இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். திராவிடத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. 2026-ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.