சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் ஐயப்பன்கோயிலின் அறங்காவலர் குழுவெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வட சபரியாய் திகழும் ஆர்.ஏ.புரம்ஐயப்ப சுவாமி கோயிலில் ஜன.1-ம்தேதிமுதல் 19-ம் தேதிவரை மகரஜோதியை முன்னிட்டு 18-ம் படிதிறக்கப்படுகிறது. இதையொட்டி விரதம் இருந்து இருமுடி எடுத்துவரும் ஐயப்ப பக்தர்கள் 18-ம் படி ஏறி, ஐயப்பனுக்குக் காலை 6 மணி முதல் 12 மணி வரை நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்துகொள்ளலாம்.
அதேபோல் பொங்கல் தினத்தன்று (15-ம்தேதி) மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்புப் பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற உள்ளன. அந்த வகையில் மகர ஜோதிக் காலத்தில், காலை 5 மணி முதல் பகல் 12மணி வரையும், மாலை 5 மணி முதல்இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து சிறப்புமிகு மகரஜோதி தரிசனம் கண்டுஐயப்பனை வணங்கி இன்புற்றுஅருள்பெற வேண்டுகிறோம்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவர் ஏ.ஆர்.ராமசாமி தலைமையில் செயலாளர் ராம.வீரப்பன் மற்றும் பொருளாளர் ஏ.ஆர்.மெய்யப்பன் இணைந்து செய்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.