தமிழகம்

பழநி மலைக் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 8,000 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பழநி: பழநி மலைக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத் தில் சாப்பிடும் பக்தர்களின் எண் ணிக்கை 8,000 ஆக அதிகரித்துள் ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால், வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

பழநி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக 2002-ம் ஆண்டு தமிழக முதல்வரின் அன்னதானத் திட்டத்தில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், 2012-ம் ஆண்டு நாள் முழுவதும் அன்னதானத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பாயாசம், அப்பளம் மற்றும் ஊறுகாயுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஒரு பந்திக்கு 350 முதல் 450 பேர் வீதம் தினமும் 4,500 முதல் 5,000 பேர் வரை அன்னதானம் சாப்பிடுகின்றனர். கடந்த சில வாரங்களாாக பக்தர்களின் வருகை அதிகரிப்பால் அன்னதானம் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 7,500 முதல் 8,000-ஆக அதிகரித்துள்ளது. பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாப்பாடு கூடுதலாக சமைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது. சமையல் செய்யவும், அன்னதானம் பரிமாறும் பணியிலும் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT