புதுச்சேரி முருகா திரையரங்கில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதை சுத்தம் செய்யும் ஊழியர். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுச்சேரியில் 7 திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி: டிக்கெட் பிரச்சினையில் தியேட்டர் உடைப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அஜீத் நடித்த‘துணிவு’, விஜய் நடித்த ‘வாரிசு’திரைப்படங்கள் இன்று வெளியா கின்றன. இதற்காக நகரெங்கும் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பல திரையரங்கு களிலும் நேற்று மாலை முதல்,வழக்கமான காட்சிகள் ரத்துசெய்யப்பட்டு புதிய திரைப்படங் களுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முருகா திரையரங்கில் இரு திரைப்படங்களும் வெளியாக உள்ளன. ரசிகர்களுக்கு டிக்கெட்கிடைக்காத சூழலில் அத்திரையரங்க கண்ணாடிகள் மர்ம நபர்களால் நேற்று மாலை உடைக்கப் பட்டன.

டிக்கெட் வெளிச் சந்தையில் விற்பனையானதால் இத்தாக்குதல் நடந்ததாகத் தெரிகிறது. இச்சூழலில் இன்று அதிகாலை ஒரு மணி காட்சிக்கு பல திரை யரங்குகள் டிக்கெட் விற்ற சூழலில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. டிக்கெட் விற்பனையானதால் அக் காட்சியை நடத்த அனுமதி கேட்டு திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்சியர் வல்லவனை அணுகினர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்தது.

இதுதொடர்பாக புதுச்சேரி ஆட்சியர் வல்லவனிடம் கேட்டதற்கு, "தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இரு திரைப்படங்கள் வெளி யாகின்றன. நள்ளிரவு 1 மணி முதல் சிறப்பு காட்சி நடத்த திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். சுமூகமாக இரண்டு முன்னணி நட்சத்திர ரசிகர்கள் பார்க்க ஏதுவாக இன்று ஒரு நாள் மட்டும் நள்ளிரவு 1 மணி காட்சி விண்ணப்பித்த திரையரங்குகளில் அனுமதி தரப்பட்டுள்ளது.

இது அனைத்து திரையரங்குகளுக்கும் பொருந்தாது. மேலும் அதிகாலை 5 மணி பிரத்யேக காட்சி 11-ம் தேதி முதல் 17 வரை அனுமதி பெற்றுள்ளதிரையரங்குகளில் அனுமதி உண்டு. கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக் கப்படும். " என்று தெரிவித்தார்.

தற்போது அதிகாலை 1 மணிகாட்சிக்கு அனுமதி பெற்றுள்ள திரையரங்குகள் விவரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு, "ரத்னா, சண்முகா, அசோக், ஜீவா, ருக்மணி, திவ்யா, முருகா திரையரங்குகள் அதிகாலை காட்சிக்கு அனுமதி பெற்றுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

இன்று ஒரு நாள் மட்டும் புதுச்சேரியில் அனுமதி பெற்ற திரையரங்குகளில் 7 காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மற்ற நாட்கள் 6 காட்சிகள்திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT