செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை 
தமிழகம்

ஆன்லைன் ரம்மி தற்கொலைகளுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று (ஜன.9) காலை சரியாக 10 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவையில் உரையைத் தொடங்கியுடன் "தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம்" என்று ஆளுநர் தமிழில் தெரிவித்தார். மேலும் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

அப்போது திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழங்கினர். 'ஆளுநரே வெளியேறு, ஆளுநரே வெளியேறு' என்று கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை,"ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்துகொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்தை புரியாமல் ஆளுநர் விளையாடிக் கொண்டிருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக இது போன்று எந்த ஆளுநரும் செயல்பட்டதில்லை." இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT