தமிழகம்

கழிவு நீர் ஓடியதை சரி செய்யாததால் ‘பாதாள சாக்கடை தெரு’ என பெயர் மாற்றிய மதுரை மக்கள்

செய்திப்பிரிவு

மதுரை: கழிவு நீர் ஓடியதை மாநகராட்சி சரி செய்யாததால், அந்த தெருவின் பெயரை பாதாள சாக்கடைத் தெரு என்று பெயர் மாற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை செல்லூர் 23 மற்றும் 24-வது வார்டு சந்திக்கும் இந்திரா நகர் பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் தெருவில் தொடர்ந்து ஓடுகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் செய்தனர். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

தொற்று நோய் பரவும் அபாயம் உருவானதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி நேற்று அப்பகுதி மக்கள் இந்திரா நகர் என்ற தெருவின் பெயரை மாற்றி பாதாள சாக்கடை அடைப்புத் தெரு என்று புதிய பெயர் பலகை திறந்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT