தமிழகம்

கல்வி துறையை சிதைக்கும் பணியில் பாஜக: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மதுரை: கல்வித் துறையை சிதைக்கும் வேலையை பாஜக செய்கிறது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டினார்.

மூட்டா அமைப்பின் பொன் விழாவை முன்னிட்டு, `உயர் கல்வியை காப்போம்’ என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு மதுரையில் நேற்று தொடங்கியது. இதில் வரலாற்று கண்காட்சியை மூட்டா முன்னாள் தலைவர் ஜேம்ஸ் வில்லியம் தொடக்கி வைத்தார்.

இதில் சு.வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது: மத்திய பாஜக அரசு கல்வித் துறை மீது முதல் தாக்குதலை தொடங்கியுள்ளதால் உயர் கல்விக்கு பேராபத்து வந்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அல்ல தமிழகம் என்கிறார். இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது. சங்க இலக்கியம் கூறும் நிலப்பரப்பு முழுவதையும் தமி ழகம் என்றழைக்க ஆளுநர் தயாரா?. ஆசிரியர்கள், மாணவர் கள் ஒன்றிணைந்து கல்வியை பாதுகாக்க வேண்டும் என்றார்.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசிய தாவது: இந்திய கோட்பாட்டை தகர்ப்பதுதான் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். அதேபோல், கல்வித் துறையை சிதைக்கும் வேலையை பாஜக செய்கிறது. பல மொழி, இனங்கள், கலாச்சாரம் உடைய தேசத்தை சமஸ்கிருத தேசமாக்க பாஜக முயற்சி செய்கிறது.

தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள். மக்களோடு இணைந்து போராடினால்தான் தேசியக் கல்விக் கொள்கையை முறி யடிப்பதோடு, நாட்டையும் பாது காக்க முடியும் என்றார். மாநாட்டில் நிர்வாகிகள் ஏ.டி.செந்தாமரைக் கண்ணன், பி.ஸ்டீபன் ஜான், ஜி.ராஜூ, ஏ.வில் சன் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT