தமிழகம்

உளுந்தூர்பேட்டையில் மாயமான 3 சிறுவர்கள் சென்னையில் மீட்பு

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்கள், நேற்று முன்தினம், நண்பகல் தொழுகைக்காக பள்ளி வாசலுக்கு செல்வதாக கூறிவீட்டு சென்றனர். மீண்டும் வீடு திரும் பவில்லை.

இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையில் தனிப்படையினர் சிறுவர்களை தேடினர். சிறுவர்கள் சென்னைக்கு கிளம்பியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை காவலர்கள் சென்னைக்கு சென்று, ராயபுரம் பகுதியில் இருந்த அந்த 3 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டு வந்து, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து காணாமல் போன 3 சிறுவர்களையும் உடனே பத்திர‌‌மாக மீட்டு, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்த தனிப்படை போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் பாராட்டினார்.

SCROLL FOR NEXT