தமிழகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி ஓரிரு நாளில் வீடு திரும்புவார்: கனிமொழி எம்.பி. தகவல்

செய்திப்பிரிவு

ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்தார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத் துவமனையில் கருணாநிதி சேர்க் கப்பட்டார். ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள கருணாநிதியை மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் நேற்று பார்த்தனர். அவருக்கு அளிக்கப் படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வருகின்றனர். வேறு யாரும் கருணாநிதியை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

துரைமுருகன் உள்ளிட்ட கட்சி யின் நிர்வாகிகள் பலர் நேற்று மருத்துவமனைக்கு வந்து கருணா நிதியின் உடல்நிலை பற்றி விசாரித் தனர். தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து கனிமொழி எம்.பி., மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார். அவரது உடல்நிலையைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழுவினர் அவர் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என கூறியுள்ளனர்’’ என்றார்.

திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியபோது, ‘‘திமுக தலைவர் கருணாநிதி நல மாக உள்ளார். வேறு மருத்துவ மனைகளில்தான் நோயாளிகள் வீடு திரும்புவது குறித்து நோயா ளிகளே முடிவெடுப்பார்கள். இங்கு அதுகுறித்து மருத்துவர்தான் முடிவு செய்வார்’’ என்றார்.

SCROLL FOR NEXT