தமிழகம்

புயல் ஒன்று பூவானது

செய்திப்பிரிவு

கடந்த ஆண்டின் பாதிப்புகள், வலைதள பீதிகள் எல்லாமாக சேர்ந்து புயல் மீதான அச்சத்தை பெரிதாக கிளப்பிவிட்டிருந்தன. தயார்நிலையில் மீட்பு படையினர், பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை என்று அரசும் முன்னேற்பாடுகளை செய்துவைத்துவிட்டு, எல்லோரும் பீதியோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அதிபயங்கர வேகத்தில் ஆர்ப்பரித்து, ஆரவாரத்தோடு சீறிப்பாய்ந்து வந்த புயல், ஆக்ரோஷம் தணிந்து ‘பூ’ப்போல அமைதியாகி, வலுவிழந்துவிட்டது.

ஆனாலும், தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று கனமழை பெய்தது. அதன் புகைப்படத் தொகுப்பு இங்கே..

சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வெள்ளமென ஓடிய மழைநீரில் அணிவகுத்து வரும் வாகனங்கள். படம்: ம.பிரபு

புயல் வலுவிழந்த நிலையிலும் நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் கடுவையாற்று துறைமுகத்தில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி அல்லாடும் விசைப்படகு.

தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக புயல் எச்சரிக்கை 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. ஆனால், மழையோ, காற்றோ இல்லை. வானிலையில் பெரிய மாற்றம் இல்லாதபோதும், கடலை நம்பியுள்ள பல விதமான பறவைகளும் கரையில் பதற்றமாக குழுமி இருந்தன. படம்: என்.ராஜேஷ்

SCROLL FOR NEXT