கைது செய்யப்பட்ட செவிலியர்கள் 
தமிழகம்

சென்னையில் தொடர் போராட்டம்: செவிலியர்கள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு காவல் துறையினர் இவர்களை கைது செய்தனர்.

கரோனா தொற்றுப் பரவலின்போது, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 31-ம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்த செவிலியர்கள், தங்களுக்கு நிரந்தர பணி வழங்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜன.1-ம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக டிஎம்எஸ் வளாகம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.6) 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT