தமிழகம்

எது கருப்பு பணம்? யார் குற்றவாளி? - தாமஸ் பிராங்கோ எழுதிய நூல் வெளியீடு

செய்திப்பிரிவு

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் தாமஸ் பிராங்கோ எழுதியுள்ள “எது கருப்பு பணம்? யார் குற்றவாளி?” என்ற நூல் நேற்று வெளியிடப் பட்டது.

மத்திய அரசு அறிவித்துள்ள பண மதிப்பு நீக்கம், கருப்பு பணம் ஒழிப்பு குறித்தும், அதன் விளைவாக பொதுமக்கள் மற்றும் வங்கிகள் சந்தித்து வரும் பிரச் சினைகள் தொடர்பாக, மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. அதை தீர்க் கும் விதமாக, எளிய மக்களும் புரிந்துகொள்ளும் விதமாக, மக்கள் மனதில் எழும் பொதுவான கேள்விகளுக்கு பதில் அளிப்பது போன்ற உரையாடல் இடம்பெற்ற “எது கருப்பு பணம்? யார் குற்றவாளி?” என்ற நூலை, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் டி.தாமஸ் பிராங்கோ எழுதியுள்ளார். அதை பாரதி புத்தகாலயம் பதிப்பகம் பதிப் பித்துள்ளது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ணன் பங்கேற்று நூலை வெளியிட்டார். அதை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொருளாளர் சண்முகம் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து டி.தாமஸ் பிராங்கோ, நிருபர்களிடம் கூறும் போது, கடந்த 43 நாட்களாக பணப் புழக்கத்தில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட் டிருக்கிறார்கள்? இதன் மூலமாக என்ன பலன் கிடைக்கப்போகிறது? இன்னும் என்ன பாதிப்புகள் வரப்போகின்றன? டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு என்ன நிலைமை ஏற்படும்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில், சாதாரண மக்களும் படித்து புரிந்துக்கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இந்த நூல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை தமிழகம் முழுவதும் விநியோகிக்க இருக்கிறோம்.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க திட்டம் நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தினாலும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்யாமல் அமல்படுத்தியதால், மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பொதுத்துறை வங்கிகளில் ஓரிரு இடங்களில் தவறு நடக்கும் நிலையில், ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிகள் மீதும் மத்திய அரசு குற்றம் சாட்டுவதை கண்டிக்கிறோம். டிசம்பர் 31-க்கு பிறகு, பணம் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் நீங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மாநில துணைப்பொதுச் செயலர் எம்.மோகன், யூனியன் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலர் அண்ணாசாமி, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க துணைப் பொதுச் செயலர் செந்திகுமார் ஆகியோர் கலந்துகொண் டனர்.

SCROLL FOR NEXT