தமிழகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் சுற்றுச்சூழலை பாதுகாத்த பக்தர்களுக்கு பரிசு: வரும் 31-ம் தேதிக்குள் நேரில் பெறலாம்

செய்திப்பிரிவு

கார்த்திகை தீபத் திருவிழாவில் துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற பைகளை கொண்டு வந்த பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் பரிசை ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “திரு வண்ணாமலையில் கடந்த 12-ம் தேதி கார்த்திகை தீபத் திரு விழா நடைபெற்றது. லட்சக்கணக் கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். அப்போது, பக்தர் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் ‘பிளாஸ்டிக்’ பையை தவிர்த்து துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பிற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், முகாம்கள் அமைத்து கிரிவலம் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர் களுக்கு கூப்பன் வழங்கப்பட்டது. அதன்பேரில் குலுக்கல் முறை யில் எண்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட் டுள்ள எண்களுடைய கூப்பன் வைத்திருப்பவர்கள் திருவண்ணா மலை வேங்கிக்கால் அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலு வலகத்தில் இம்மாதம் 31-ம் தேதிக் குள் பரிசுகளை நேரில் பெற்றுக் கொள்ளவேண்டும்’ என தெரிவித் துள்ளார். மேலும், விவரங்களுக்கு 80560 42184, 80560 99140, 88704 70687 என்ற செல்போன் எண்களிலும் மற்றும் 04175 - 233118 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தங்க நாணயம் பெற

குலுக்கலில் தேர்வு செய்யப் பட்ட எண்கள் 015225, 334011, 335287.

வெள்ளி நாணயம் பெற

குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட எண்கள் 291074, 291148, 2917019, 015273, 015894, 016991, 105998, 0188011, 018255, 110287, 333997, 248813, 034199, 087444, 335208, 335456, 092645, 092698, 087691, 087736, 092969, 087811, 087843.

SCROLL FOR NEXT